வருடாந்த பொதுக்கூட்டம் – 2022

வருடாந்த பொதுக்கூட்டம் – 2022

சகல அங்கத்தவர்களுக்கும்,
அன்புடையீர்!

மேற்படி கூட்டம் April 10th, 2022ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு 5001 Finch Avenue East (Party Hall) Scarborough, ON (intersection Finch & McCowan) அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அவர்களின் வாரிசுகள் அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்
1. கடவுள் வணக்கம், அக வணக்கம்
2. சென்ற பொதுக்கூட்டஅறிக்கை – செயலாளர்
3. செயலாளரின் ஆண்டறிக்கை
4. பொருளாளரின் நிதியறிக்கை
5. பிரேரணைகள்
6. தலைவர் உரை
7. புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு
7. வேறுவிடயங்கள்
8. நன்றியுரை
9. கல்லூரி கீதமும் கூட்டத்தின் நிறைவும்

பிரேரணைகள் சமர்ப்பிக்க விரும்புவோர் அவற்றை March 31st, 2022 அன்று அல்லது அதற்கு முன்பாக செயலாளருக்கு கிடைக்கக் கூடியதாக info@khcosa.ca அல்லது 5215 Finch Avenue east, Box# 204, Scarborough, ON M1S 0C2 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

மேலதிக தொடர்புகளுக்கு : 416-388-3935 / 416-318-6195 / 416-836-6937

நன்றி

மைதிலி பாலகுமார்
செயலாளர்


புதிய நிர்வாகசபைத்தேர்வு :

எமது சங்கத்தின் புதிய யாப்பின் பிரகாரம் புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவை ‘தேர்தல் குழுவே’ பொறுப்பேற்று நடத்தும்.

இணைக்கப்பட்ட படிவத்தைக் கவனத்தில் எடுத்து நிர்வாகசபை உறுப்பினராக இணைந்து கொள்வதற்கு படிவத்தை தேர்தல் குழுவிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

சங்கத்தின் உறுப்பினராக வருடாந்த சந்தா செலுத்தியோர், ஆயுட்கால அங்கத்தவர்கள் மட்டுமே நிர்வாகசபையில் அங்கம் வகிப்பதற்கும், பொதுக்கூட்டத்தில் வாக்களிப்பதற்கும் தகுதி உடையோர் ஆவர்.

மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கு சங்கத்தின் அமைப்பு விதிகளைப் பார்வையிடலாம்.

 

தேர்தல் குழு தொடர்புகளுக்கும் – படிவங்களை அனுப்புவதற்கும் : rmahendran@hotmail.com

 

நிர்வாகபை உறுப்பினர தெரிவிற்கான விண்ணப்பப்படிவம்

சங்கத்தின் அமைப்பு விதிகள்

அங்கத்தவர் விண்ணப்பப்படிவம்